கோவையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் விஜய் கட்சியில் திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு அவர் விஜய்க்கு வாக்கு வங்கி என்ற ஒன்றே கிடையாது. அவருக்கு என்ன வாக்கு வந்து இருப்பது என்று தெரியவில்லை இது பற்றி எல்லாம் தெரியாமல் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார். அதன் பிறகு யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யாரையும் குறைத்தும் ‌ சொல்லவில்லை. அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் கட்சி சார்ந்த கேள்விகளை கேட்பதை தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்.

மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில், திமுக தான் முதல் எதிரி என்று அவர் அறிவித்தார். அதன் பிறகு ‌ திராவிடமாடல் ஆட்சி என்று அவர்கள் ‌ மக்களை ஏமாற்றி வருவதாகவும், குடும்ப ஆட்சி செய்யும் கட்சி என்றும் விமர்சித்ததோடு செயற்குழு கூட்டத்திலும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றினார். மேலும் சமீபத்தில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போது சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் சீர்கெட்டு கிடைக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்திருந்தார். விஜய் திமுகவை எதிரி என்று அறிவித்த நிலையில் பிற அரசியல் கட்சிகள் திமுகவுக்கு விஜயை பார்த்து பயம் என்று கூறிவரும் நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் பதில் பேசும் பொருளாக மாறி உள்ளது.