
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக சமீபத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்த வந்த பலரும் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நீதிமன்ற தீர்ப்பு இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
கடவுள் மறுப்பு அரசாங்கத்திற்கு இது மிகப்பெரிய தோல்விதான். இரவோடு இரவாக பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுவித்துள்ளது. அரசாங்கத்துக்கு சனி திசை. தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு கிடைக்கும் தோல்விதான் இந்துக்களுக்கு திமுக தரும் பரிசாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.