
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பெண்கள் பயன்பெறும் விதமாக ஆதார் ஷீலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் மூலமாக ஒரு நாளைக்கு 87 ரூபாய் டெபாசிட் செய்தால் வருடத்திற்கு 31, 755 ரூபாய் வரை சேமிக்கலாம். அதனைப் போலவே மூன்று வருடங்களில் 31.75.50 ரூபாய் உங்களின் பாலிசி கணக்கில் இருக்கும். அதிகபட்சமாக 70 வயது பூர்த்தி அடையும் வரை இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வந்தால் முதிர்வு காலத்தில் உங்களுக்கு 11 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பட்சத்தில் இந்த தொகை அவரின் குடும்பத்திற்கு அப்படியே வழங்கப்படும். பெண்களுக்கான இந்த பிரத்தியேக காப்பீடு திட்டத்தில் எட்டு வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இணைய முடியும். 70 வயதாகும்போது பணம் உங்களை வந்தடையும். இதில் கணக்கு தொடங்க பாலிசிதாரர் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.