இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகின்றது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் சேமிக்க விரும்புகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் என்று பல்வேறு காரணங்களுக்காக முதலீடு செய்கிறார்கள். அதற்காக LIC அனைத்து சிறப்பு திட்டங்களையும் வழங்கி வருகின்றது. அதில் சிறப்பான திட்டம் தான் எல்ஐசி ஜீவன் தருண் யோஜனா திட்டம். ஒரு சிறிய தொகையை சேமிப்பதன் மூலமாக முதிர்வு தொகையை இலட்சக்கணக்கில் பெற முடியும்.

குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதிர்வு காலம்  ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் பெயரில் வாங்கலாம். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 75 ஆயிரம் ரூபாய். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும். அதாவது 20 ஆண்டுகள் வரை ப்ரீமியம் செலுத்தி கொள்ளலாம். காப்பீடு 25 ஆண்டுகளுக்கு இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது இந்த பாலிசியை வாங்கினால் 23 வயது வரை செல்லுபடி ஆகும். 18 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். 10 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்தால் ஒரு நாளைக்கு 171 ரூபாய் என்ற கணக்கில் சேமிப்பு செய்ய வேண்டும். உங்களுடைய மொத்த முதலீடு 10.89 லட்சமாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 25 வயது ஆன பிறகு 8.24 லட்சம் ரூபாயாக உங்களுக்கு கிடைக்கும். எனவே குறைந்த முதலீட்டில் உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.