பொதுவாக தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த மின் தேவை சமாளிப்பதற்கு மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த வருடம் கோடை காலத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் முதல் மே மாதம் வரை மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரி இருக்கிறது.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கை மத்திய அரசின் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்போது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆயிரம் மெகா வாட் மின் கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் மின் தேவை சமாளிக்க முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.