
கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு நிதி கிருஷ்ணா என்ற ஒரு 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த சிலையை ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தினசரி கற்றாலை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி கடந்த 14ஆம் தேதி வீட்டில் இருந்த கற்றாலை ஜூஸை எடுத்து சிறுமி குடித்தார்.
ஒரு பாட்டிலில் இருந்த அந்த ஜூசை குடித்தவுடன் திடீரென அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் ஒரு மருத்துவமனையில் தங்கள் மகளை சிகிச்சைக்காக அனுமதித்ததனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது சிறுமி குடிக்கும் கற்றாலை ஜூஸ் அந்த பாட்டிலில் காலியாகி விட்டது. இதனால் பெற்றோர் செடிகளுக்கு தெளிப்பதற்காக அதில் பூச்சி மருந்தை வைத்துள்ளனர்.
இதனை அறியாமல் அதனை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.