தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் குற்றாலம் வந்துள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.