
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது.
அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக பரபரப்பான செய்தி வெளியானது.
இதேபோன்று மற்றொரு முன்னாள் எம்எல்ஏவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முன்னாள் எம்எல்ஏ நல்ல தம்பி தேமுதிக கட்சியிலிருந்து தான் விலகவில்லை எனவும் தேவையில்லாமல் போலி செய்திகளை பரப்பி வருவதாகவும் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, நான் அளித்த கடிதத்தில் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டும் தான் கேட்டேன். ஒருவேளை விடுவிக்காவிடில் நானே விலகி விடுவேன் என்றேன்.
ஆனால் இந்த செய்தியை ஊடகங்களில் தவறாக கட்சியிலிருந்து விலகுவதாக சொன்னதாக பரப்புகிறார்கள். நான் என்னை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் தான் தொடர்ந்து பயணிப்பேன். மேலும் என் உயிர் மூச்சு உள்ளவரை அவரது தொண்டனாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார்.