தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 3-ம் தேதி அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகைகள் தமன்னா, ராசி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.