தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் பகத் பாசில் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த படத்தில் ஜாதி வெறி பிடித்த அதிகார போதையுடன் இருப்பவராக பகத் பாஸில் நடித்து மிரட்டி இருப்பார்.

அவரது காட்சிகளை மாஸாக எடிட் செய்து பல்வேறு தரப்பினர் தங்கள் ஜாதி பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் மாமன்னன் ரத்தினவேல் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பேஸ்புக்கில் cover photo வாக வைத்திருந்த பகத் பாஸில் தற்போது அதனை நீக்கியுள்ளார். மேலும் இது குறித்து பல வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.