
ரஷ்ய நாட்டில் 55 வயதுடைய டிமிட்ரி உகின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். அந்த பூனை திடீரென அவருடைய காலில் நகத்தால் கீறியது. அந்த பூனை கீறியதில் அவருக்கு காலில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இந்த சம்பவம் கடந்த 22ஆம் தேதி நடந்த நிலையில் டிமிட்ரி உயிரிழந்தார்.
அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவைகள் இருந்துள்ளது. இதன் காரணமாக அதிக அளவு ரத்தம் வெளியேறியதில் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்றவைகள் இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரர் முதலுதவி அளித்த நிலையில் மருத்துவ குழு வருவதற்கு தாமதமானதால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.