
சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பேருந்து தார் சாலையில் மோதி தீ பொறி பறக்க ஆரம்பித்தது. பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.