
கேரள மாநிலம் மலப்புறம் அருகே திருநாவயா பகுதியில் வசித்து வரும் 37 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் அங்கமள்ளியில் இருந்து தொட்டில் பாலம் நோக்கிச் சென்ற கேரளா போக்குவரத்துக்கு சொந்தமான அரசு பேருந்தில் நேற்று பயணித்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் துடித்துள்ளார். உடனே ஓட்டுனர் பேருந்தை அருகே உள்ள மருத்துவமனையை நோக்கி ஓட்டி சென்றார். அப்போது அந்தப் பெண் பிரசவ வலியால் அலறி துடித்த நிலையில் மருத்துவமனை வாசலில் பேருந்து நிறுத்தப்பட்டது.
உடனே நர்சு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பேருந்தை நோக்கி விரைந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணின் நிலைமை மோசம் அடைந்து பனிக்குடம் உடைந்து குழந்தை பிறக்கும் நிலையில் இருந்துள்ளார். உடனே சற்றும் தாமதிக்காமல் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு பேருந்திலேயே பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தை மற்றும் பெண் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இது தொடர்பான காட்சி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.