
சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில் ஓடுவதற்கு தயாராக இருந்தது அப்போது விமானத்தில் முதன்முதலாக ஏறிய 17 வயது சிறுவன் தவறுதலாக அவசரகால எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளார்.
விமானத்தின் எச்சரிக்கை ஒலி திடீரென எழுந்ததால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை உணர்ந்த சிறுவனின் பெற்றோர் சக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு அந்த சிறுவனும் அவரது பெற்றோரும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது.