ரூ.500 நோட்டில் ராமர் உருவம் அச்சிடப்படும் என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி, ஜன.22ஆம் தேதி ராமர் உருவம் பொறித்த ரூ.500 ரூபாய் நோட்டு அமலுக்கு வருவதாகவும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால், இதில் எந்த உண்மையும் இல்லை என மத்திய அரசின் PIB FACT CHECK நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், அது பொய்யான செய்தி என்பது உறுதியாகி உள்ளது