கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும்.

வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு செல்லக்கூடிய தண்ணீர் பந்தல் பகுதியில் காட்டு யானைகள் விவசாய தோட்டத்திற்குள் நுழைய முயன்றது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் இரண்டு வாகனங்களில் காட்டு யானையை விரட்டுவதற்காக சென்றனர். அப்போது காட்டு யானை ஆக்ரோஷமாக ஓடி வந்து வனத்துறையினரின் வாகனத்தை முட்டி தள்ள முயன்றது. அதனை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.