
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஏரவு அன்றுக்கள் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கடையில் துணிகள் பார்வையிட வந்த இளம்பெண் மீது திடீரென கடையின் மேற்கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்தது.
திடீரென பாம்பு விழுந்ததை பார்த்த அந்த பெண் கடும் பயத்தில் கத்தியபடி ஓடி தப்பினார். அதிர்ஷ்டவசமாக பாம்பு அந்த பெண்ணை கடிக்கவில்லை.
இந்த சம்பவம் கடையில் அமைந்திருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. பாம்பு விழுந்த பிறகு, கடை உரிமையாளர் கடை முழுவதும் தேடி பார்த்தும் அந்த பாம்பு எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது அருகிலுள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டியதற்கான அவசியத்தையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.