உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள் ஒரே இடத்தில் பின்னிப்பிணைந்து படம் எடுத்து ஆடியது. சில பாம்புகள் கீழே விழுவதும் வீடியோவில் காணப்படுகிறது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்புகளை பிடித்து சென்றனர்.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.