
தஞ்சாவூர் மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் நித்யஸ்ரீ என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவியின் ஏழ்மை நிலையை அறிந்து மாணவியின் வீட்டிற்கு சென்று தஞ்சை எம்.பி முரசொலி உதவி செய்துள்ளார். அந்த மாணவியின் தாய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.
அவரது தந்தை யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த தஞ்சை எம்பி முரசொலி நித்யஸ்ரீயின் வீட்டிற்கு சென்று அவருக்கு நிதியுதவி அளித்து உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.