தமிழகத்தில் அரசு சார்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு வழங்கும் கடன்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்டால் தாட்கோ மூலமாக எந்த மாதிரியான தொழில் தொடங்க கடன் தருகிறார்கள், அதற்கான டோக்கன்களை தயார் செய்வது மற்றும் புள்ளி விவரங்களை தயார் செய்வது, அந்த கடன் பெற தகுதி என்ன வேண்டும் என்ற விவரங்களை கேட்க வேண்டும்.

அதன் பிறகு தகுதி இருந்தால் விண்ணப்பித்து கடன் வாங்கலாம். அரசு வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதம் மிக குறைவு என்பதால் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைப்பு திட்டம் 40 கோடி செலவில் புதிய திட்டமாக அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மானியத்தில் தாட்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை அறிய சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.