தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் 2026 தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் நடிகர் விஜய் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய நிலையில் இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் தவெக வெற்றி பெற்றால் புஸ்ஸி ஆனந்த் முதல்வர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் ஆனந்த் மற்றும் ஆதாவ் அர்ஜுனா இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக பேனரில் ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை வைத்ததாக கூறி வட்ட செயலாளர் பிரதீப் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பேனர்களில் விஜய் மற்றும் ஆனந்த் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் மற்ற யாருடைய புகைப்படங்களையும் பயன்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.