
விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரமாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அரசியல் எதிரி, சித்தாந்ததிரி உள்ளிட்டவற்றை விஜய் அறிவித்தார். அந்த மாநாட்டின் போது வெவ்வேறு சூழ்நிலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நிதி உதவி வழங்கினார்.
அந்த வகையில் திருச்சியில் இருந்து காரில் வந்த சீனிவாசன் கலைக்கோவன் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் மாநாடு திடலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆக மொத்தம் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க வந்த ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து 2 லட்ச ரூபாய் விஜய் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவையும் விஜய் ஏற்கிறார்.