
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது புஸ்ஸி ஆனந்த் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் முதல் மாநாடு குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நிர்வாகிகள் முதல் முறையாக கட்சியின் வண்ணத்தில் துண்டு அணிந்து பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது, தளபதின்னா அது நம்முடைய தலைவர் தளபதி மட்டும்தான். காவல்துறை எத்தனை கண்டிஷன் போட்டாலும் நம்முடைய தலைவர் சொன்னால் அதை செய்ய லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு முதல் மாநாட்டில் பெண்கள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கு தொடர்பு மகளிர் ஆதரவு என்பது அதிகரித்து வருவதால் கண்டிப்பாக அது வெற்றி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த மாநாடு காவல்துறையினரின் விதிமுறைகளை பின்பற்றி ஒழுக்கத்துடன் நடைபெற வேண்டும். நம்முடைய ஒரே இலக்கு 2026 இல் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக மாறுவது மட்டும் தான். அதன் பிறகு கட்சிக்காக உழைத்துள்ளேன்.
எனக்கு கட்சியில் பதவி வேண்டும் என்று whatsapp மூலம் யாராவது தொடர்பு கொண்டால் எனக்கு கோபம் வந்துவிடும். எனவே எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து தான் பேச வேண்டும். தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகளுக்கு என தனி அனுமதி சீட்டு கிடையாது. எனவே யார் வேண்டுமானாலும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து நிர்வாகிகளும் விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் அனைத்து நிர்வாகிகளும் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து கலந்து கொள்வது முக்கியம் என்று கூறினார்.