
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்கள். இந்நிலையில் ஆர் பி உதயகுமார் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தான் அதிமுக தேர்தலை சந்திக்கும்.
இதற்கு ஆதரவளிக்கு கூட்டணி அமைக்கும் நல்ல உள்ளங்கள் எந்த மூலையில் இருந்தாலும் சிவப்பு கம்பளம் பிரித்து அவர்களை வரவேற்க நாங்கள் ரெடியாக இருக்கிறோம். கூட்டணி தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் பதில் அளிப்பார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு திமுக அரசின் செயல்படாத போக்கை தோலுரித்துக் காட்டுவார். இதைத்தொடர்ந்து அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் வரும் என்றார். மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என்று கூறிய நிலையில் இதற்கு விஜய் ஒப்புக்கொண்டால் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.