
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை சவுக்கு சங்கர் அளித்துள்ளார்.
மேலும் அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை, உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (மே 17) 4 மணிக்கு சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.