ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார்.

ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதி ஜஹா அஷ்ரஃப் ஆகியோர் வியாழன் (இன்று) அன்று நடைபெறவிருக்கும் ஐசிசி வாரிய கூட்டத்திற்கு முன்னதாக ஆசிய கோப்பை அட்டவணையை இறுதி செய்ய சந்தித்தனர் என்பதை உறுதிப்படுத்தினார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜஹா அஷ்ரப்பை சந்தித்தார், மேலும் ஆசிய கோப்பை அட்டவணை ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. லீக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு 4 ஆட்டங்கள் இருக்கும், அதைத் தொடர்ந்து 9 ஆட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இலங்கையில் 2 ஆட்டங்களும், இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது ஆட்டமும் அடங்கும்,” என்று அருண் துமால் டர்பனில் இருந்து பிடிஐயிடம் தெரிவித்தார். அதாவது ஆசிய கோப்பை ஹைபிரிட் மாடலின் அடிப்படையில் நடைபெறும் என்றும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் கூறினார்..

அண்டை நாடான பாகிஸ்தானில் இந்தியா விளையாடும் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் வரும் செய்திகளை அருண் துமால் மறுத்துள்ளார்.“அப்படியான எந்த விவாதமும் நடக்கவில்லை. இந்தியாவோ அல்லது பிசிசிஐ செயலாளரோ பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்ற செய்தி தவறானது. அட்டவணை மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார் அருண் துமால்.

2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது.பாகிஸ்தானின் ஒரே சொந்த ஆட்டம் நேபாளத்திற்கு எதிரானது மட்டுமே..மற்ற 3 போட்டிகள் ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம், வங்கதேசம் vs இலங்கை மற்றும் இலங்கை vs ஆப்கானிஸ்தான். இதுதவிர மற்ற போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்பது தெளிவாகிறது ..சில தகவல்களின்படி, ஜூலை 14 ஆம் தேதி அட்டவணை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஆசியக்கோப்பை 2022 பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.