தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் “வாரிசு”. இந்த படம் குடும்ப ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தமிழகத்தில் வாரிசு படம் ரூபாய்.145 கோடிகள் வரை வசூலித்து தளபதி படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக வந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் வாரிசு வெள்ளித் திரையில் ரூபாய்.300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைபடைத்து உள்ளது.

இத்திரைப்படம் இப்போது Sun Nxt OTT தளத்தில் வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் வெளிவருகிறது எனும் தகவல் வெளியாகியுள்ளது. திரையில் கொண்டாடிய வாரிசு படத்தை உலகமெங்கும் இருக்கும் தளபதி ரசிகர்கள் Sun Nxt தளத்திலும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.