தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தாத், அர்ஜுன் சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.‌‌

இந்நிலையில் லியோ படத்தில் தற்போது புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார். அதாவது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த அபிராமி தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளார். மேலும் காஷ்மீரில் லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நடிகை அபிராமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.