தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு செம மாஸான அப்டேட் கிடைத்துள்ளது. தசையில் ஏற்பட்ட காயம் (Calf Strain) காரணமாக முதல் இரண்டு வார போட்டிகளில் விளையாடாமல் இருந்த நம்ம ‘தல’ தோனி, இப்போது முழுமையாகக் குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் தனது பிட்னஸ் டெஸ்ட்டை எதிர்கொள்ளவிருக்கிறார். இதில் அவர் தேறிவிட்டால், வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவது 100% உறுதி.

​அதேபோல், பக்கவாட்டு தசைப்பிடிப்பு (Side Strain) காரணமாக விலகியிருந்த இளம் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரேவிஸும் இந்தப் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று போட்டிகளில் வரிசையாகத் தோற்றுப் புள்ளிகள் பட்டியலில் பின் தங்கியுள்ள சிஎஸ்கே அணிக்கு, தோனியின் வருகை ஒரு மிகப்பெரிய டானிக் போல அமையும். சேப்பாக்கம் மைதானத்தில், ‘தல’ தலைமையிலான பழைய சிஎஸ்கேவை மீண்டும் பார்க்க ரசிகர்கள் இப்போதே மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.