
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் குடும்பப்பாங்கான தோற்றத்தில் நடிப்பதால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நடிகர் அஜித் மற்றும் விஜயுடன் சேர்ந்து நடிக்க மறுத்ததாக தகவல்கள் பரவியது.
இதற்கு தற்போது நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் எப்போதும் வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை. ஒருவேளை எப்படி விளக்கம் கொடுத்தால் அந்த வதந்திகள் உண்மை என்று ஆகிவிடும். அது என் வேலையையும் பாதிக்கும். நான் விளக்கம் அளித்தால் அந்த வதந்திக்கு பலம் சேர்ந்து விடும். இதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். மேலும் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்கும் எந்த வாய்ப்புகளையும் நான் இதுவரை நிராகரித்தது கிடையாது என்று கூறியுள்ளார்.