
காஞ்சிபுரத்தில் திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். அதன்பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தும் திமுக கட்சியினை புகழ்தும் கூட்டணி கட்சி தலைவர்களான முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் பேசிய நிலையில் தற்போது வைகோவும் திமுக கட்சியை புகழ்ந்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, திமுகவை அழிக்க நினைக்கிறவர்களின் வெற்று கூற்றல், வேங்கைகளும் சிங்கங்களும் உலவுகின்ற கனகத்தில் ஊளைச்சத்தம் எழுப்புகின்ற குள்ளநரிகளின் வேலை. விண்ணும் மண்ணும் நிலைத்திருக்கும் வரை என்றென்றும் திமுக கட்சியும் நிலைத்திருக்கும். திமுகவை அழித்து விடலாம் என்று இந்துத்துவா சக்திகளும் சனாதன சக்திகளும் திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரே நாடு ஒரே மொழி போன்ற திட்டங்களை மத்திய அரசு திணிக்க நினைத்தால் தலை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.