
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் டீசரில் தன்னுடைய அனுமதியின்றி தன் பாடலை பயன்படுத்தியதால் அதற்கு காப்புரிமை வேண்டும் என கூறி தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இது பலரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ரஜனிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம் தொடர்பான ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது ஒருமுறை திருவண்ணாமலைக்கு நடிகர் ரஜினி மற்றும் இளையராஜா இணைந்து காரில் சென்றுள்ளனர். அவர்கள் காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்த ரசிகர்கள் தலைவா தலைவா என ஆர்ப்பரித்துள்ளனர். இதனால் இளையராஜா மிகவும் கோபப்பட்டுள்ளார். அதாவது ரசிகர்கள் தன்னை கவனிக்காமல் ரஜினியை மட்டும் கொண்டாடியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் கோபத்தில் ரஜினியை அங்கிருந்து கிளம்புமாறு அவர் கூறியுள்ளார். உடனடியாக ரஜினியும் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். மேலும் இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.