
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆடு, மாடுகளுடன் இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் கோயிலுக்கு போகிறேன்.
தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்ற முடிகிறது தலைவருக்கான நெருக்கடியை தவிர்த்து நிம்மதியாக உள்ளேன். மோடிக்கு தொண்டனாக இருந்து பணியாற்றுவதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.