மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்க மோடி உரிமை கோரவுள்ளார்.

இதற்கிடையில் மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியை பலமாக தக்கவைக்க INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்க பாஜக முயலும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.