தமிழ்நாட்டில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பாஜகவின் இந்த தோல்விக்குபாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இப்போதே பாஜகவுக்குள் குரல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எப்படி இருந்த பாஜக இப்படி ஆகிவிட்டதே.. அண்ணாமலை மட்டும் வாய் அடக்கத்தோடு இருந்திருந்தால் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்று தேர்தல் தோல்வி குறித்து ஆதங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொட்டி தீர்த்துள்ளார்.