மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்தியவர் தனது மகளை அங்கேயே நிற்க கூறியதோடு தனது போன் கீழே விழுந்து விட்டது பார்த்து எடுத்து வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

ஆனால் அவர் உயரமான பாலம் ஒன்றின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார்.

பின்னர் அவரது மகள் நிற்பதை பார்த்துவிட்டு அவரிடம் விசாரித்துவிட்டு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவருக்கு வேலை கிடைக்க வழிவகை செய்வதாகவும் தற்போது பிரியாணி பார்சல் வாங்கி கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்ட அந்த நபர் பாதுகாப்பாக கீழே இறங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.