
மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் லைவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராகுல் அகிர்வர் என்ற 20 வயது வாலிபர் ஒரு பெண் youtube-ரை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் வாலிபரை காதலித்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பிரிந்த நிலையில் ராகுல் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் instagram-ல் லைவில் வீடியோ போட்ட வாலிபர் தனக்கு வாழ விருப்பம் இல்லாததால் சாகப்போவதாக கூறினார்.
இது பற்றி வாலிபர் பேசும்போது, இது என்னுடைய கடைசி வீடியோ. எனக்கு வாழ விருப்பமில்லை. நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். வாழ்க்கையில் யாரையும் காதலிக்காதீர்கள் என்று கூறினார். பின்னர் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோ வைரலானதால் ராகுலின் நண்பர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..