கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிக்க வேண்டும் தமிழக மக்களுக்கு எப்படி எல்லாம் தீங்கு விளைவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கக் கூடிய அநீதியான போக்குகள் எல்லாம் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மொழிக்கு ஆபத்து என்று நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பல தியாகங்களை செய்திருக்க கூடிய, இன்னுயிரை இழந்த பல தலைவர்களின் தியாக வரலாற்றை எல்லாம் நான் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளேன்.

தந்தை பெரியாராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணாவாக இருந்தாலும் அவர்களுடைய வழியில் நின்று பணியாற்றிய கருணாநிதி என அவர்கள் தமிழ் மொழிக்காக செய்த தியாகங்களையும் சேவைகளையும் மறந்து விட முடியாது. இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற பெருமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என்பதை நம்மால் மறந்து விட முடியாது. அந்த தமிழைப் பற்றி கலைஞர் பல நேரம் எடுத்து சொல்வார்கள், அன்பே,ஆருயிரே, கனியே என்று பலவாறு புகழ்ந்து பேசுவார்.

அப்படிப்பட்ட தமிழை மற்ற சொல்களை சொல்லி வர்ணிப்பதை விட தமிழ் என்று சொல்வதை தவிர வேறு அழகு எதிலும் இல்லை என்று கருணாநிதி கூறுவார். அப்படிப்பட்ட தமிழுக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் பேசியுள்ளார்.