2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் வரும்  19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் தமிழர் பண்பாட்டு தளங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல்வழி பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணங்கள் தமிழ் இனத்தின் வரலாறு, இலக்கியம் மற்றும் உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.