தயாரிப்பாளர் அருண் வீரப்பன் மறைவிற்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டரில், அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்கு தன் பங்களிப்பினை அளித்தவருக்கு என் இதய அஞ்சலி என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.