தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் காலாண்டு தேர்வுகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு செப். 28 – அக்.2ம் தேதி வரை, சனி, ஞாயிறு உடன் சேர்த்து 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 2 நாள் காலாண்டு விடுமுறை அளிக்க பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது செப்.28 – அக்.4 வரை (ஒருவாரம் ) விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.