தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் கிராம பெருமக்களுக்கு கூடுதல் வேலை நாட்களை வழங்க வேண்டும் என வும் தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விளைவு உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அதிக அளவில் பயிர் சாகுபடிகளை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பட்டம் மாறுதலுக்காக வந்துள்ள விண்ணப்பங்களில் நிலுவையில் உள்ள பட்டாக்களை உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.