இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி, கச்சா பொருள்களின் விலை ஆகியவற்றை பொறுத்து ஒவ்வொரு மாதத்திலும் சிலிண்டர் விலையும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் மானியம் 200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ஆனது 118 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரியலூரில் சிலிண்டரின் விலை ரூ. 1140க்கும், சென்னையில் ரூ. 1118.50 க்கும், கோயம்புத்தூரில் ரூ.1132க்கும், கூடலூரில் ரூ.1139 க்கும், தர்மபுரியில் ரூ.1141 க்கும், திண்டுக்கல்லில் ரூ.1145 க்கும், ஈரோட்டில் 1137.50 க்கும், கள்ளக்குறிச்சியில் 11450-க்கும், காஞ்சிபுரத்தில் ரூ.1118.50 க்கும், கன்னியாகுமரியில் ரூ.1187 க்கும், கரூரில் ரூ.1157.50 க்கும் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் மற்ற மாநிலத்தை ஒப்பிடும்போது சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. மேலும் சிலிண்டரை டெலிவரி செய்யும் போது பொதுமக்கள் கூடுதலாக எந்தவித தொகையையும் செலுத்த தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.