தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்”என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் :

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடர்கள் என அறிவித்து NDRF இல் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் விமான நிலைய விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

சென்னை – பினாங்கு, சென்னை – டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்கிட வேண்டும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பினை விரைந்து வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் NHAI  செயல்படுத்தி வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இருவழிச்சாலையாக மாற்றப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த MSME நிறுவனங்களுக்கு BHEL நிறுவனம் அதிக அளவில் procurement orders வழங்க வேண்டும்.