நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் ரயில்வே திட்டங்கள் சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் பாமக கட்சி நிறுவனர் ராமதாசும் அதேபோன்று கூறியுள்ளார். இவர் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார். மேலும் கூட்டணியில் உள்ள பாமக கட்சியே பட்ஜெட் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

https://x.com/drramadoss/status/1815686654570696717?t=u7rocze-qH5WUCaAn4fV8A&s=19