தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க கூடுதல் நேரம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு இனி https://nsc.tnebltd.gov.in/nsconline/என்ற இணையதளத்திலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.