அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுகவில் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை விட்டுவிட்டு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமித்துள்ளனர்.

திமுக கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையே கிடையாது. தமிழ்நாட்டில் ஒருபோதும் மன்னராட்சி எடுபடாது. மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களைப் போல் இல்லாமல் தற்போது கடன் வாங்கி மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.