செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 18 நூலகங்களில் 100 பேர் உரையாற்று வருகிறார்கள். கட்சி சார்ந்த பொதுக்கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது பெரிய விஷயமில்லை. இதுபோன்ற இலக்கிய கூட்டத்தில் மக்கள் கூடுவது தான் அரிதான விஷயம். கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து புத்தகத்தை எழுதி வருகிறேன்.

கொரோனாவால் தமிழகம் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீண்டு வந்ததற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு புத்தகமாக தொகுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணி நிறைவு பெற்று புத்தகமாக வெளியிடப்படும். தமிழகத்தில் இப்போது எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திமுக ஆட்சி தான் காரணம் என்று கூறியுள்ளார்.