
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது. எனவே பட்டியலின இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவது எஸ்டி மக்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும். ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலீத்தை முதலமைச்சர் ஆக்க முடியாது. ஜனநாயகத்தைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம். சாதியை ஒழிப்பது தான் விசிகவின் நோக்கம். அதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள். ஜாதிய உள்ள நோக்கத்துடன் யாரும் என்னுடைய பின்னால் வரவேண்டாம் என்று கூறினார்.