தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று 2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியான சண்முகப்பிரியா என்பவர் கலந்து கொண்டார். இந்த மாணவி நடிகர் விஜயை பற்றி மேடையின் புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, நான் உங்களுடைய குரலை கேட்க வந்துள்ளேன் விஜய் அண்ணா.

உங்களை நான் ஒரு நல்ல மனிதனாகவும் தலைவராகவும் உணர்கிறேன். இங்கு மதிப்பெண் பெற்று சாதித்ததை விட நீங்கள் எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.‌ தமிழகத்தின் தளபதி நீங்கள். உங்களை நிகழ்கால கல்விக்கு கண் கொடுக்கும் கர்மவீரர் காமராஜராக பார்க்கிறேன். உங்களை என்னால் காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி வாழும் மாணவி நான். உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கு தற்போது பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்று கூறினார். மேலும் அந்த மாணவி பேசி முடிக்கும் வரை நடிகர் விஜய் மைக்கை பிடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.